வீட்டின் கதவுக்கு தீவைத்து துளையிட்டு கொள்ளை முயற்சி


வீட்டின் கதவுக்கு தீவைத்து துளையிட்டு கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 11 May 2022 10:13 AM GMT (Updated: 2022-05-11T15:43:10+05:30)

வீட்டின் கதவுக்கு தீவைத்து துளையிட்டு கொள்ளை முயற்சி

அவினாசி, மே.12-
 அவினாசி காமராஜ் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி ராதாமணி  இவர்கள் இருவரும் சம்பவ தினத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றனர். இரவு 1 மணியளவில் ராதாமணி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்கதவில் நெருப்பு பற்றி எரிந்துள்ளது. உடனே தண்ணீர் ஊற்றி நெருப்பை அனைத்துள்ளார். அப்போது வீட்டின் பின் பிறம் இருந்து இரண்டு மர்ம நபர்கள் ஓடியுள்ளனர். அந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்கதவை நெருப்பு பற்றவைத்து அதில்துளையிட்டு தாள்பாளை திறக்க முயற்சித்துள்ளனர். வீட்டிற்குள் ஆள் வந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்க்ள. குடியிருப்பு நிறைந்த பகுதியில் வீட்டின் கதவை துளையிட்டு உள்ளே புகுந்து திருட முயன்ற சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story