கோவில்பட்டியில் ஜனநாயக மாதர் சங்க கூட்டம்


கோவில்பட்டியில்  ஜனநாயக மாதர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 4:09 PM IST (Updated: 11 May 2022 4:09 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஜனநாயக மாதர் சங்க கூட்டம் நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பாரதி இல்லத்தில் நகர அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ஆர்.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். நகரக்குழு உறுப்பினர் ராமலட்சுமி கொடியேற்றி வைத்தார். நகரக்குழு உறுப்பினர் பவுன் கிரேஸ் வரவேற்று பேசினார். மாநாட்டில் மாவட்ட செயலாளர் பூ மயில், துணைச்செயலாளர் கமலம், பழனியம்மாள், ராமலட்சுமி, ஜெயமங்களவல்லி ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில், பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறங்களில் அமல்படுத்த வேண்டும். கோவில்பட்டி நகரில் பழுதடைந்த சாலைகள், வாறுகால்களை உடனடியாக சீரமைத்திட வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story