மடத்துக்குளம் பகுதியில் தொடர் மின்தடை
மடத்துக்குளம் பகுதியில் தொடர் மின்தடை
டத்துக்குளம்,
மடத்துக்குளம் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் கூடுதலான மின் இணைப்புகள் உள்ளன. கடைகள், பேக்கரிகள் மற்றும் ஒர்க் ஷாப் லேத், கயிறு உற்பத்தி உள்ளிட்ட பலவகையான தொழில்களுக்கும், வங்கிகள், துணிக்கடைகள், ஏ.டி.எம்.கள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கும் மின்சாரம் மிக முக்கிய தேவையாக உள்ளது. தற்போது அரசு பொதுத்தேர்வுகள் நடப்பதால் மாணவ-மாணவிகள் இரவிலும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மின்விளக்குகள் மிக அவசியம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை ஏற்படுகிறது. மேலும் அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்தடை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது “ மின்தடையால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் கிரைண்டர், மிக்சி, ஓவன், மின்சார அடுப்பு, பிரிட்ஜ், அயன் பாக்ஸ் உள்ளிட்ட மின் உபகரணங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது உள்ள மின்தடையால், சமையல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மின் உபகரணங்கள் பழுதடையும் அபாயமும் உள்ளது. பலவகையான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு தொடர் மின்தடையை சரி செய்ய வேண்டும். என்றனர்.
Related Tags :
Next Story