பிவண்டியில் தானே ஊரக போலீஸ் தலைமையகம்- 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
தானே ஊரக போலீஸ் தலைமையகம் தானே நகர் பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தானே ஊரக போலீஸ் தலைமையகம் அமைக்க 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தானே,
தானே ஊரக போலீஸ் தலைமையகம் தானே நகர் பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தானே ஊரக போலீஸ் தலைமையகம் அமைக்க 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாநில வருவாய் துறை பிவண்டியில் உள்ள வாஷிரி, சாபே ஆகிய கிராம பகுதியில் போலீஸ் தலைமையகம் அமைக்க நிலம் ஒதுக்கி உள்ளது. இந்த தகவலை தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்னாத் ஷிண்டே அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தற்போது தானே ஊரக போலீசின் கீழ் முர்பாடு, கணேஷ்புரி, சாகாப்பூர் ஆகிய 3 துணை மண்டலங்கள், 11 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தானே ஊரக போலீசின் கீழ் பிவண்டியின் சில பகுதிகள், கல்யாண், முர்பாடு, சாகாப்பூர் தாலுகா பகுதிகள் உள்ளன.
Related Tags :
Next Story