பாட்டியை கொலை செய்த பேரன் கைது
சாயல்குடி அருகே பாட்டியை கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
சாயல்குடி, மே.12-
சாயல்குடி அருகே பாட்டியை கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
கொலை
சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது75). இவர் நேற்றுமுன்தினம் ஆள்மாறாட்டத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அது சம்பந்தமாக கொலை செய்த அவரது பேரன் மணிமாறனை பிடிக்க கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் ராமேசுவரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பஸ் கீழக்கரை பஸ்நிறுத்தம் அருகே கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார் பஸ்சை நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் கொலையாளி மணிமாறன் தூத்துக்குடி செல்வதற்காக பஸ்சில் இருந்தது தெரிய வந்தது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்து சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணை
சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா விசாரணை மேற்கொண்டதில் மணிமாறன் கூறியதாவது:- தனது தாய் ஜெயா, தந்தை மலையப்பனிம் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலை பகுதியில் வசித்து வந்துள்ளோம். திருமணம் செய்து கொண்டு மாரியூர் கிராமத்தில் இருக்க வேண்டும் என்று தந்தை மலையப்பன் மற்றும் சித்தி கன்னியம்மாளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் தந்தை மற்றும் சித்தி கன்னியம்மாள் ஆகியோரை கொலை செய்துவிட்டு சொத்தை எடுத்துக் கொள்வோம் என நினைத்தேன்.
கன்னியம்மாள் தான் தூங்குகிறார் என நினைத்து எதிர்பாராத விதமாக பாட்டியை கொலை செய்துவிட்டேன் என்று சாயல்குடி போலீசில் மணிமாறன் வாக்குமூலம் அளித்தார். இதுதொடர் பாக மணிமாறனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story