மும்ராவில் வளர்ப்பு தாய் பலி- வாலிபர் கைது
மும்ராவில் வளர்ப்பு தாயை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
மும்ராவை சேர்ந்தவர் இம்ரான் கான்(வயது25). கடந்த 3-ந் தேதி வளர்ப்பு தாய் ஷானாஸ் பானுவிடம் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஆத்திரமடைந்த இம்ரான் கான் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார்.
இதில் படுகாயமடைந்த ஷானாஸ் பானு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ந் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய இம்ரான் கானை தேடிவந்தனர். இந்நிலையில், அவர் குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் டுங்ரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து, மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story