புகார் அளிக்க வந்த பெண்ணை கற்பழித்த போலீஸ்காரர்- தானேவில் கொடூரம்
போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பெண்ணை கற்பழித்த போலீஸ்காரரை போலீஸ் கைது செய்தனர்.
தானே,
பயந்தர் கிழக்கு பகுதியில் உள்ள நாவ்கர் போலீஸ் நிலையத்துக்கு, சமீபத்தில் 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கணவர் மீது குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளிக்க சென்றார். அப்போது பெண்ணிடம் பாபாசாகேப் டோலே என்ற போலீஸ்காரர் புகாரை பெற்றார்.
பின்னர், அவர் புகார் தொடர்பாக அடிக்கடி பெண்ணை தொடர்புகொண்டு பேசி உள்ளார். இதில் சம்பவத்தன்று புகார் தொடர்பாக பேச வேண்டும் என்று, போலீஸ்காரர் பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்து உள்ளார்.
அப்போது, போலீஸ்காரர் தன் வீட்டில் வைத்து பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பாபாசாகேப் டோலே மீது போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரரை கைது செய்தனர்.
மேலும் அவரை காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story