வீரசக்கதேவி கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வீரசக்கதேவி கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2022 11:43 AM GMT (Updated: 11 May 2022 11:43 AM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே, வீரசக்கதேவி கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, வீரசக்கதேவி கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் 66-வது திருவிழா நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த திருவிழாவுக்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமத்துரை நினைவு ஜோதி கொண்டு வரப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவில் இரு நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். அவர் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி கோவில், வீரபாண்டி கட்டபொம்மன் நினைவுக்கோட்டை மற்றும் அதன் வளாக பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், எபனேசர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story