எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்- உத்தவ் தாக்கரேவுக்கு ராஜ் தாக்கரே கடிதம்


ராஜ் தாக்கரே கடிதம்
x
ராஜ் தாக்கரே கடிதம்
தினத்தந்தி 11 May 2022 11:44 AM GMT (Updated: 2022-05-11T17:14:08+05:30)

எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் என உத்தவ் தாக்கரேவுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.

மும்பை, 
  எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் என உத்தவ் தாக்கரேவுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.
உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம்
  நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த 4-ந் தேதிக்குள் மாநிலத்தில் மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என எச்சரிக்கைவிடுத்து இருந்தார். 
  மேலும் ஒலிபெருக்கி அகற்றப்படவில்லை எனில் நவநிர்மாண் சேனாவினர் மசூதிகளின் அருகில் ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடல்களை 2 மடங்கு சத்தத்துடன் ஒலிபரப்புவார்கள் என கூறியிருந்தார். எனினும் அவரின் அறிவிப்பு மாநிலத்தில் பெரிய அளவில் எந்த தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை.
  இந்தநிலையில் அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 
  28 ஆயிரத்திற்கு அதிகமான நவநிர்மாண் சேனா தொண்டர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். எதற்காக இது?. ஒலி மாசை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை மசூதிகளில் இருந்து அகற்றக் கூடாது என்பதற்காகவா?. போலீசார் நவநிர்மாண் சேனா தலைவர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் போல தேடுகின்றனர்.
பொறுமையை சோதிக்க வேண்டாம்
  மராத்தியர்களும், இந்துக்களும் மாநில அரசின் நிலைபாட்டை பார்த்து கொண்டு இருக்கின்றனர். மாநில அரசிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கூறி கொள்கிறேன். எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். யாரும் ஆட்சி அதிகாரத்தின் தாம்பூலத்துடன் வரவில்லை. உங்களிடம் கூட அது இல்லை, உத்தவ் தாக்கரே.
  இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Next Story