மெய்யூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


மெய்யூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 May 2022 11:47 AM GMT (Updated: 11 May 2022 11:47 AM GMT)

மெய்யூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள மெய்யூரில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளது. அதை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். 

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் மெய்யூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி திருவண்ணாமலை மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் உத்திரகுமார் ஆகியோர் மெய்யூர் கிராமத்துக்குச் சென்று, அங்கு ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளை அளவீடு செய்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடு மற்றும் சாகுபடி செய்திருந்த நெற்பயிர் உள்ளிட்டவைகளை அகற்றினர். 

அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story