பெண்ணின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது


பெண்ணின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 12:07 PM GMT (Updated: 2022-05-11T17:37:14+05:30)

பெண்ணின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது

ீரபாண்டி, மே. 12-
தனியாக வீடு எடுத்து 3 மாதம் குடும்பம் நடத்திய நிலையில் பெண்ணின் ஆபாச படத்தை இணைய தளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
வாலிபர்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் இமான் என்பவரின் மகன் இமான் ஹமீப் வயது 21. இவர் திருப்பூர்  காசிபாளையம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இணையதளம் இன்ஸ்டாகிராம் மூலம் இரவு முழுவதும் தொடர்ந்து கரூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணிடம் பழகி வந்தார். இந்த பழக்கம் அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து  இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.
அதன்பின்னர் திருப்பூர் காசிபாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து இளம் பெண்ணும், இமான் ஹமீப்பும்  ஒன்றாக ஒரே வீட்டில் கடந்த 3 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அப்போது அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் பலமுறை கேட்டுள்ளார். பல காரணங்களைக் காட்டி தவிர்த்து வந்த இமான் ஹமீப், திருமணம் செய்து கொள்ள தற்போது விருப்பமில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இளம் பெண் அவரை விட்டு பிரிந்து சென்றார். 
கைது
இதில் ஆத்திரமடைந்த இமான் ஹமீப், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார். இணையதளத்தில் வெளியான வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் மாநகர கமிஷனர் ஏ.ஜி.பாபு, திருப்பூர் நல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் இமான் ஹமீப்பை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவரது செல்போனில் இளம் பெண்ணுடன் தனியாக இருந்த ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நல்லூர் போலீசார், இமான் ஹமீப் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story