பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை- தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு


தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
தினத்தந்தி 11 May 2022 5:40 PM IST (Updated: 11 May 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில், தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

மும்பை, 
  பா.ஜனதா ஆளும் மாநிலங்களில், தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. 
கிராம தலைவர் கைது
  உத்தர பிரதேசத்தில், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பாவ்டி குர்த் கிராமத்தின் முன்னாள் கிராம தலைவரான ராஜ்பீர் தியாகி  என்பவரின் விளைநிலத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்ய மறுத்ததாக தெரிகிறது. 
  இதையடுத்து, அவர் பட்டியல் சமூகத்தில் இருந்து யாரும் தனது விளைநிலத்துக்குள் நுழைந்தால், அவர்களை 50 முறை செருப்பால் அடிப்பேன் என்றும், ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். 
  இதுதொடர்பாக, முன்னாள் கிராம தலைவர் ராஜ்பீர் தியாகியை போலீசார் கைது செய்தனர். கிராமத்தில் உள்ள பட்டியல் சமூக மக்களின் வீடுகளுக்கு முன்பு, மேளம் அடித்து இந்த அறிவிப்பை வெளியிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
  இந்த சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறியதாவது:-
கிராம கூட்டங்கள்
  பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை, எனவே நாட்டில் உள்ள தலித்துகளின் பாதுகாப்பை, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வேண்டும். 
  பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதுதான் மோடி அரசின் அனைத்து மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியா?
  நாட்டில் இந்த பிரச்சினைகள் குறித்து பிற சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும் உணர்த்துவதற்கு கிராம கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 
  இவ்வாறு அவர் கூறினார். 
-----

Next Story