தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - சாலையோரம் நின்ற கார் சேதம்


தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - சாலையோரம் நின்ற கார் சேதம்
x
தினத்தந்தி 11 May 2022 12:19 PM GMT (Updated: 2022-05-11T17:49:18+05:30)

ஆவடியில் பெய்த மழையால் தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது சுவர் இடிந்து விழுந்ததால் காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

ஆவடி, 

‘அசானி’ புயல் எதிரொலி காரணமாக நேற்று சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழை ஆவடி பகுதியிலும் பெய்த நிலையில், தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது சுவர் இடிந்து விழுந்ததால் காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தரமற்ற முறையில் சுவர் கட்டப்பட்டதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Next Story