சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்து


சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்து
x
தினத்தந்தி 11 May 2022 12:32 PM GMT (Updated: 2022-05-11T18:09:56+05:30)

பிருதூர் கிராமத்தில் சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

வந்தவாசி

கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்ேகற்க ஒரு சொகுசு காரில் வந்தனர். சுவீட் வாங்குவதற்காக அச்சரப்பாக்கத்தில் இருந்து அவர்கள் சொகுசு காரில் வேலூரை நோக்கி வந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் வந்த போது, பிருதூரில் பாலம் விரிவுப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீெரன சொகுசு கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 

அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு ஓடி வந்து காரில் இருந்த கணவன், மனைவி மற்றும் ஒரு குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலில் வந்தவாசிக்கும், பின்னர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி ைவத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தகவல் அறிந்ததும் வந்தவாசி வடக்கு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். காரை ஓட்டியவர் காதர்பாட்ஷா, காரில் வந்தவர் மனைவி நவீலா பாத்திமா மற்றும் அவர்களின் குழந்தை என்றும் தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story