திருச்செந்தூர் அருகே ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூர் அருகே ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே, ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாலியல் தொல்லை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலையில் விளாத்திகுளத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.
ஆறுமுகநேரி அருகே பஸ் சென்றபோது அங்குள்ள நிறுத்தத்தில் 12 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் பஸ்சில் ஏறினார். அவர் டிரைவர் இருக்கை அருகே நின்று பயணித்தார். அப்போது பஸ்சை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சுரேஷ், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கைது
இந்த சம்பவம் குறித்து கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி, அரசு பஸ் டிரைவர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். கைதான சுரேஷ் தூத்துக்குடியில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Related Tags :
Next Story