திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 11 May 2022 1:42 PM GMT (Updated: 2022-05-11T19:12:30+05:30)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையராக மு.கார்த்திக் பொறுப்பேற்றார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இணை ஆணையராக (பொறுப்பு) பணியாற்றி வந்த குமரதுரை திருப்பூர் மண்டல இணை ஆணையராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கோவை மண்டல உதவி ஆணையராக (நகைகள் சரிபார்ப்பு) பணியாற்றிய மு.கார்த்திக் பதவி உயர்வு பெற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று காலையில் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
குமரதுரை, புதிய இணை ஆணையர் கார்த்திக்கிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். அப்போது, கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், கண்காணிப்பாளர்கள் சீதாலட்சுமி, முருகன், சுப்பிரமணியன், ராஜ்மோகன், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story