ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
செங்கோட்டையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி செங்கோட்டை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவா் அய்யப்பன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியா் சங்க நிர்வாகி டேனியல் முன்னிலை வகித்தார். ஆசிரியா் அமுதா வரவேற்று பேசினார். வட்டார செயலாளா் ரவிச்சந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நிர்வாகி கோவில்பிச்சை சிறப்புரையாற்றினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் வட்டார பொறுப்பாளா் செண்பகவல்லி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story