போலீசாரிடம் தகராறு செய்த வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் சங்குபுரம் தெரு வழியாக ஒருவழிப் பாதையில் செல்வது வழக்கம். நேற்று மதியம் வழக்கம் போல் ஒரு வழிப்பாதையில் பஸ்கள் சென்று கொண்டிருந்தது.
அப்போது சங்குபுரம் 3-ம் தெருவைச் சேர்ந்த சேகர் (வயது 25) என்பவர் குடிபோதையில் அரசு பஸ்சை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பஸ்சை தொடர்ந்து இயக்கவிடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரிடம் விசாரணை செய்தனர். ஆனால் குடிபோதையில் இருந்த சேகர் போலீசாரிடமும் தகராறு செய்தார். இதனைத்தொடர்ந்து போலீசார், சேகரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story