சாத்தான்குளத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


சாத்தான்குளத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 7:31 PM IST (Updated: 11 May 2022 7:31 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாத்தான்குளம்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு, வட்டார ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதன்கிழமை  ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மாணிக்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ரோஸ்லின் அன்னலீலா முன்னிலை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர் செல்லப்பா, வட்டார செயலாளர் ஸ்டீபன் தாஸ், திருச்செந்தூர் கல்வி மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன் மாணிக்கத்துரை, மாநில செயற்குழு உறுப்பினர் அன்டனி சார்லஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  வட்டார பொருளாளர் கீதா நன்றி கூறினார்.

Next Story