பழுதடைந்து கிடக்கும் மதகுகள்
நாகை மாவட்டத்தில் பாசன வாய்க்கால்களில் 10 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிப்பாளையம்;
நாகை மாவட்டத்தில் பாசன வாய்க்கால்களில் 10 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூர்வாரும் பணிகள்
டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கான வேளாண் பணிகளை தொடங்குவதற்காக, தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் வெட்டாறு மற்றும் ஓடம்போக்கி பாசன வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மதகுகள்
நாகை அருகே பாலையூரில் 10 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் மதகுகள் சீரமைக்க படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் மேட்டூர் அணை தண்ணீர் திறப்பின் போது கல்லணை வழியாக வரும் காவிரி நீர் பாசன பகுதிகளுக்கு செல்லாமல் கடலுக்கு சென்றுவிடுமோ என விவசாயிகளிடம் அச்சம் எழுந்துள்ளது. எனவே நாகையில் தேவநதி வழியாக காவிரி நீர் பாயும் பாலையூர், செல்லூர், காடம்பாடி, வடகுடி வாய்க்கால்கள் பராமரிப்பின்றி உள்ளது.
பழுது நீக்க கோரிக்கை
இந்த மதகுகளை உடனடியாக, மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக சீரமைத்து தர வேண்டும் என கடைமடை விவசாயிகள் தமிழக நீர்வளத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாசன வாய்க்கால்களில் உடைந்து கிடக்கும் ராட்சத குழாய்களில் பழுது நீக்க வேண்டும் எனவும் துருப்பிடித்து பயனற்று கிடக்கும் இரும்பு கதவுகளை சரி செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story