தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நூதன விழிப்புணர்வு
கம்பத்தில், தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கம்பம்:
கம்பம் நகராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மையை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டிய வண்ணம் உள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நூதன விழிப்புணர்வு பிரசாரத்தில் நகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தை தேர்வு செய்து அங்கு பணியாளர்கள் கோலம் வரைந்து வருகின்றனர். குப்பை கொட்ட வருகிற பெண்கள், இந்த கோலத்தை பார்த்து விட்டு அதன் மீது குப்பைகளை கொட்டாமல் திரும்பி செல்கின்றனர்.
நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நூதன விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை 33 வார்டுகளிலும் செயல்படுத்த நகராட்சி சுகாதாரத்துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story