கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி, காலை தெற்கு நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை, மாலை பெண்கள் மாவிளக்கு ஏந்தி நகர்வலம் வருதல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 54 அக்னி சட்டிகளுடன் அம்மன் பக்தர் ஒருவரும், 21 அக்னி சட்டிகளுடன் அம்மன் பக்தர்களும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
சித்திரை திருவிழா நிறைவு நாளான நேற்று காலையில் ஏராளமான பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
மாலையில் கோவில் முன்பு மஞ்சள் நீராட்டு விழா, முளைப்பாரி ஊர்வலம், அம்மன் பல்லக்கில் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
------------
Related Tags :
Next Story