மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் + "||" + Gold ring for babies born in a government hospital

அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தென்காசி:

தொழில் அதிபரும், சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்வி குழும தலைவருமான அய்யாத்துரை பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் மற்றும் புத்தாடைகள் அய்யாத்துரை பாண்டியன் பேரவை சார்பில் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேரவை தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் காளிதாஸ், செயற்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், ஆனந்த், பேச்சிமுத்து, பூலோகராஜ், மற்றும் முப்புடாதி, பசும்பொன், கணேசன், சிவசாமி, குத்தாலிங்கம், ராஜா, அருணாசலம், மாரிமுத்து, தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.