தொழிலாளி தற்கொலை
கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே உள்ள நந்தனார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தவம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், கள்ள ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக வருசநாடு போலீசாரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த தவம், தினமும் காலை-மாலை வேளையில் வருசநாடு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார்.
இதன் காரணமாக, வேலைக்கு செல்லமுடியாமல் தவம் சிரமப்பட்டு வந்தார். குடும்பத்தை சரிவர கவனிக்காததால் தவத்துக்கும், அவருடைய மனைவி பாண்டியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தவம், நந்தனார்புரம் சுடுகாட்டுக்கு சென்று அங்கிருந்த இலவம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story