மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி
மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி
பந்தலூர்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எருமாட்டில் பெய்த பலத்த மழை காரணமாக கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அய்யன்கொல்லி, பாதிரிமூலா, ஏலமன்னா ஆகிய பகுதிகளில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது.
இதேபோன்று அய்யன்கொல்லி அருகே அரிதினி பகுதியில் சசிதரன் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன. அங்கு மூனநாடு கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றனர்.
Related Tags :
Next Story