துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 15-ந் தேதி ஊட்டி வருகிறார்


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 15-ந் தேதி ஊட்டி வருகிறார்
x
தினத்தந்தி 11 May 2022 7:46 PM IST (Updated: 11 May 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிற 15-ந் தேதி ஊட்டிக்கு வருகிறார்.

ஊட்டி

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிற 15-ந் தேதி ஊட்டிக்கு வருகிறார்.

துணை ஜனாதிபதி வருகை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக 14-ந் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வரும் வெங்கையா நாயுடு, அங்கிருந்து கோவைக்கு வருகிறாா். 

இதைத்தொடர்ந்து 15-ந் தேதி கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வருகிறாா். இதன் பின்னர் அங்கு காலை 11 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதையடுத்து மற்றொரு ராணுவ ஹெலிகாப்டரில் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார். 20-ந் தேதி வரை அவர் ஊட்டியிலேயே தங்கி இருக்கிறார். 

அவருடன் தமிழக கவர்னர் ஆா்.என்.ரவியும் ஊட்டிக்கு வருகிறாா். துணை ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. பின்னர் அவர், 20-ந் தேதி மீண்டும் புறப்பட்டு டெல்லி செல்கிறார். துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே வானிலை நிலவரத்திற்கு ஏற்ப, தேவைப்பட்டால் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர்கள் வருவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


Next Story