மாவட்ட செய்திகள்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Primary school teachers protest

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கூடலூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டார தலைவர் சஜி தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. அரசு உறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் இணை செயலாளர் மணிமேகலை, செயலாளர் நதீரா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.