முதியவர் தவறவிட்ட ரூ.13 ஆயிரம் ஒப்படைப்பு
முதியவர் தவறவிட்ட ரூ.13 ஆயிரம் ஒப்படைப்பு
கோத்தகிரி
கோத்தகிரி மார்கெட்டில் உள்ள ஜெராக்ஸ் கடையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து விட்டுச்சென்றார். அவர் அந்த கடையில் பை ஒன்றை தவறவிட்டார். அதை ஊழியர் ஜெனட் பவுலின் எடுத்து பார்த்த போது, ரூ.13 ஆயிரம் இருந்தது. மேலும் அந்த பையில் கிருஷ்ணன், கல்லட்டி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே பணத்துடன் அந்த பையை கோத்தகிரி போலீஸ் நிலைய ஏட்டு ஜேக்கப்பிடம் ஒப்படைத்தார்.
பின்னர் நடந்த விசாரணையில், பணத்தை தவறவிட்டது கல்லட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற முதியவர் என்பதும், பச்சை தேயிலையை வினியோகித்த தொகையை தவறவிட்டு சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், ஜெராக்ஸ் கடை ஊழியர் ஜெனட் பவுலின் கையால் பணத்தை ஒப்படைக்க செய்தனர். மேலும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story