தார் சாலை அமைக்க வேண்டும்


தார் சாலை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 May 2022 7:58 PM IST (Updated: 11 May 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

தாணிக்கோட்டகத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு;
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் பிச்சகட்டளை பகுதியில் இருந்து ஆதிதிராவிடர் வசிக்கும் தெருவிற்கு செல்லும் மண் சாலை உள்ளது.இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் தாணிக்கோட்டகம் கடைத்தெரு சென்று வருவதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் இந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மண் சாலையை தார்சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story