புனே விமான நிலையத்தில் போலி டிக்கெட்டுகள் வைத்திருந்த இருவர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 May 2022 7:59 PM IST (Updated: 11 May 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

புனே விமான நிலையத்தில் போலி டிக்கெட்டுகளுடன் பயணம் செய்ய வந்த 2 பேரை, விமான நிலைய ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புனே, 
  புனே லோகேகாவ் விமான நிலையத்தில் 2 பேர் அங்கிருந்த ஊழியர்களிடம் விமானத்தை தவற விட்டதாகவும், வெளியே செல்ல உதவி செய்யும்படியும் தெரிவித்தனர். இதன்படி ஊழியர்கள் அவர்கள் வைத்திருந்த விமான டிக்கெட்டை வாங்கி பார்த்தனர். இதில் பி.என்.ஆர் நம்பரில் குளறுபடி இருப்பதை அறிந்தனர். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் 2 பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
  இதுபற்றி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ஜெய்ப்பூர் செல்ல இருந்த 2 பேர் பெண்ணை சந்திக்க விமான நிலையம் வந்தனர்.
  விமான நிலையத்திற்குள் நுழைய போலி டிக்கெட்டை பயன்படுத்தி உள்ளே நுழைந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை நேற்று கைது செய்தனர்.

Next Story