மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு பாராட்டு + "||" + 2 girls win in talent exam

மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு
திருமருகல் அருகே திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திட்டச்சேரி;
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-22 -ம் கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு  நடைபெற்றது. இத்தேர்வில் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் புறாகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுபிக் ஷா மற்றும் நிவேதா ஆகிய 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 2 மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஆண்டுதோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டது. கடந்த வருடம் நடைபெற்ற தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களையும் ஊக்குவித்த தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்களையும் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மற்றும்முன்னாள் பள்ளி மாணவர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.