வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்


வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 11 May 2022 3:15 PM GMT (Updated: 2022-05-11T20:45:29+05:30)

திருமருகல் அருகே வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

திட்டச்சேரி;
திருமருகல் வட்டாரம் கீழப்பூதனூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.முகாமில் திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் முன்னிலை வகித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்தும் பேசினார்.  மண் மாதிரி மற்றும் நீர் மாதிரி எடுத்து ஆய்வகத்தில் ஒப்படைக்கும் செயல்முறை குறித்து நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சுதா கூறினார். இதில் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதேபோல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பல், ஏர்வாடி, பனங்குடி மற்றும் போலகம் கிராமங்களில் முகாம்கள் நடைபெற்றது.

Next Story