போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்


போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
x
தினத்தந்தி 11 May 2022 3:30 PM GMT (Updated: 11 May 2022 3:30 PM GMT)

சாலை தேய்மானம் அடைவதை அறிவதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்: 

நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் தேய்மானம் அடைவதை அறிவதற்காக அவ்வப்போது போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்படும். குறைந்தபட்சம் ஒருவாரம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்து கணக்கெடுப்பு பணியை கடந்த 9-ந்தேதி தொடங்கினர். திண்டுக்கல்லில், பேட்டைமேட்டுப்பட்டி-நாகல்நகர் சாலை, பேகம்பூர் சாலை, மதுரை சாலை, வத்தலக்குண்டு சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முனீஸ்வரன், உதவி பொறியாளர் நாகநாதன் முன்னிலையில் இந்த கணக்கெடுப்பு நடந்தது. 

கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சாலை ஆய்வாளர் கென்னடி ஜெயபாலன் மேற்பார்வையில் சாலைகளில் செல்லும் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனங்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

Next Story