மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை + "||" + Private company employee suicide

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தேனியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:

தேனி அல்லிநகரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரதாபன் மகன் ராம்குமார் (வயது 25). இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி சுமதி (25). இவர்கள் இருவரும் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தபோது காதலித்தனர். 

கடந்த 2018-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் இருக்கிறான். இந்தநிலையில் ராம்குமார் பார்த்து வந்த வேலையில் போதிய வருமானம் இன்றி அவர் அவதிப்பட்டார். இதனால் ராம்குமார் வேறு வேலை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் வேறு வேலை கிடைக்காத விரக்தியில் அவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தத அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுமதி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
பென்னாகரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
2. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
3. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
4. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
திருமணம் ஆகாத ஏக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.