காயாமொழி ராமநாதபுரம் இசக்கி அம்மன் கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடக்கிறது
காயாமொழி ராமநாதபுரம் இசக்கி அம்மன் கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடக்கிறது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே காயாமொழி ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி உடனுறை இசக்கி அம்மன் கோவிலில் 39-ம் ஆண்டு வருசாபிஷேகம், பரிகார பூஜை மற்றும் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் சுதர்சன ஹோமம் நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், தில ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வல்லநாடு, சங்கரன்கோவில் செல்ல புறப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்குமேல் கொடை விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story