அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்


அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 9:28 PM IST (Updated: 11 May 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.

சுரண்டை:

சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அழகு பார்வதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவில் வளாகத்தில் இருந்து தேர் புறப்பட்டு கோட்டைத் தெரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வழியாக சுரண்டை மாநகராட்சி அலுவலகம் அருகில் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்திற்கு வந்தது. விழா ஏற்பாடுகளை அனைத்து சமுதாய விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Next Story