உச்சினிமாகாளி அம்மன் கோவில் திருவிழா


உச்சினிமாகாளி அம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 11 May 2022 4:00 PM GMT (Updated: 2022-05-11T21:30:16+05:30)

உடன்குடி பெருமாள்புரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

உடன்குடி:
உடன்குடி பெருமாள்புரம் உச்சினிமாகாளிஅம்மன், காந்தாரி அம்மன், துர்க்கை அம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி 108 திருவிளக்கு பூஜை, வில்லிசை, குடியழைப்பு, அலங்கார தீபாராதனை, கும்பம் தெருவீதி வருதல் நடைபெற்றது. உடன்குடி கீழ பஜார் கண்டுகொண்ட விநாயகர் கோவிலில் இருந்து பால்குட எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நண்பகல் சிறப்பு கும்பம் தெருவீதி வருதல் நடந்தது. நேற்று கோவில் முன் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

Next Story