நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிக்கலாம்-கலெக்டர் தகவல்


நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிக்கலாம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 May 2022 4:08 PM GMT (Updated: 2022-05-11T21:38:25+05:30)

தென்காசி மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிக்கலாம் என்று கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் (நகர்ப்புறம்) ரூ.145.80 லட்சம் மதிப்பீட்டில் 10 எண்ணம் அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில், திட்ட மதிப்பீட்டில் 33 சதவீதம் மட்டுமே பொது மக்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையினை அரசு வழங்கும்.

நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு, பொது மக்கள் பங்களிப்பு தொகையினை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் வரைவோலையாகவோ மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தி உரிய விபரங்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story