மாவட்ட செய்திகள்

தர்மபுரியில்வீடு, துணிக்கடையில் திருட்டு + "||" + Theft

தர்மபுரியில்வீடு, துணிக்கடையில் திருட்டு

தர்மபுரியில்வீடு, துணிக்கடையில் திருட்டு
தர்மபுரியில் வீடு, துணிக்கடையில் நகை, பணம் திருட்டு நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள குப்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெற்றிவேல் (வயது 30). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து  மீண்டும் திரும்பி வந்தார். அப்போது கதவின் பூட்டு  உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் தங்க தோடு, வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம், நகையை திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி எதிரே துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்கூரையை பிரித்து நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கு வைத்திருந்த சட்டைகள், ஜீன்ஸ் பேண்ட், வாட்ச் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். இது தொடர்பாக கடை மேலாளர் சத்ரிய மகாராஜன் அளித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
அருப்புக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்றனர்.
2. வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை-பணம் திருட்டு
விருதுநகரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
3. வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருட்டு
வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போனது.
4. மோட்டார் சைக்கிள் திருட்டு: போலீசார் வலைவீச்சு
மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. வீடு புகுந்து 35 பவுன் நகைகள் திருட்டு
துறையூர் அருகே வீடு புகுந்து 35 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.