தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி:
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பார்த்திபன், மேகநாதன், முனுசாமி, கோவிந்தசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story