பாப்பாரப்பட்டி அருகே சரக்கு வேனில் கடத்திய 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

பாப்பாரப்பட்டி அருகே சரக்கு வேனில் கடத்திய 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்  டிரைவர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 4:16 PM GMT (Updated: 2022-05-11T21:46:37+05:30)

பாப்பாரப்பட்டி அருகே சரக்கு வேனில் கடத்திய 20 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி:
பாப்பாரப்பட்டி அருகே சரக்கு வேனில் கடத்திய 20 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் உத்தரவின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பாப்பாரப்பட்டி-பாலக்கோடு சாலையில் கிட்டம்பட்டி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார், டிரைவரிடம் விசாரணை நடத்தினர். 
டிரைவர் கைது
அப்போது அவர் கே.என்.சவுளூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பதும், ரேஷன் அரிசி மூட்டைகளை கர்நாடகாவுக்கு கடத்தி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேன் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story