அரூர் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு மோட்டார் சைக்கிளுடன் தப்பிய 3 பேருக்கு வலைவீச்சு


அரூர் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு மோட்டார் சைக்கிளுடன் தப்பிய 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 May 2022 4:17 PM GMT (Updated: 2022-05-11T21:47:11+05:30)

அரூர் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விட்டு மோட்டார் சைக்கிளுடன் தப்பிய 3 பேரை போலசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அரூர் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். மாவேரிப்பட்டி குப்பை கிடங்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் 3 பேர், மோட்டார் சைக்கிளை வழிமறித்து துரைசாமியை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதை கண்டு அக்கம் பக்கத்தினர் துரைசாமி குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து முதியவரை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுடன் தப்பிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story