அரசு பெண்கள் கல்லூரி ஆண்டுவிழா


அரசு பெண்கள் கல்லூரி ஆண்டுவிழா
x
தினத்தந்தி 11 May 2022 4:17 PM GMT (Updated: 2022-05-11T21:47:51+05:30)

நாமக்கல்லில் அரசு ெபண்கள் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லுாரியில் 53-வது ஆண்டு விழா மற்றும் பேரவை நிறைவுவிழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் புவனேஸ்வரி வரவேற்றார். இதில் எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
இதை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story