மாமரத்தில் இருந்து குதித்து பிளம்பர் தற்கொலை


மாமரத்தில் இருந்து குதித்து பிளம்பர் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 4:18 PM GMT (Updated: 2022-05-11T21:48:23+05:30)

கும்மிடிப்பூண்டி அருகே மாமரத்தில் இருந்து குதித்து பிளம்பர் தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது நேமளூர் கிராமம். இங்கு வசித்து வந்தவர் சேகர் (வயது 36). பிளம்பர். இவருக்கு பவானி (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில், பவானி கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சேகர் தனது வீட்டின் அருகே இருந்த மாமரத்தின் உச்சியில் ஏறி, அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story