மாவட்ட செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பணம் திருட்டு + "||" + Money theft at St Anthony Church

ஸ்ரீமுஷ்ணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பணம் திருட்டு

ஸ்ரீமுஷ்ணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பணம் திருட்டு
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் பணம் திருடப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள தெத்து விநாயகர் கோவிலிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலக வாயிலில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய கதவு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை காணவில்லை. 
இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் புனித அந்தோணியார் ஆலயத்தை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

கொள்ளை முயற்சி

அதில் நள்ளிரவில் ஆலயத்தின் கதவை உடைத்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர். மேலும் அதே சாலையில் உள்ள தெத்து விநாயகர் கோவில் முன் கதவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கருவறை கதவின் பூட்டை உடைக்க முடியாததால், கொள்ளை முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றதும் தெரியவந்தது. 
இதுகுறித்த புகாாின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் அருகருகே உள்ள ஆலயம் மற்றும் கோவில் பூட்டை உடைத்த சம்பவம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது
2. கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் பணம் திருட்டு
கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் பணம் திருடு போனது.
3. 2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடந்துள்ளது.
4. தர்மபுரியில் லாரி டிரைவர் வீட்டில் நகை பணம் திருட்டு
தர்மபுரியில் லாரி டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
5. வீடு புகுந்து பணம் திருட்டு
வீட்டில் புகுந்து பணம் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.