மாவட்ட செய்திகள்

திருமக்கோட்டை அருகே விஷப்பூச்சி கடித்து கல்லூரி மாணவி சாவு + "||" + poisonised insect bite girl

திருமக்கோட்டை அருகே விஷப்பூச்சி கடித்து கல்லூரி மாணவி சாவு

திருமக்கோட்டை அருகே விஷப்பூச்சி கடித்து கல்லூரி மாணவி சாவு
திருமக்கோட்டை அருகே விஷப்பூச்சி கடித்து கல்லூரி மாணவி இறந்தார்.
திருமக்கோட்டை:-

திருமக்கோட்டை அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகள் ஜோதிகா (வயது20). இவர் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றார். அப்போது அவரை விஷப்பூச்சி கடித்தது. இதையடுத்து அவர் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜோதிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.