ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் தாசில்தார் ஆய்வு
வால்பாறையில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறை
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் வால்பாறையில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை அனுப்ப கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வால்பாறை தாசில்தார் (பொறுப்பு) ஜெகதீசன் தலைமையில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஸ்ரீராஜ் மற்றும் அலுவலர்கள் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள மாணவர் விடுதி, அண்ணாநகர் பகுதியில் உள்ள மாணவியர் விடுதி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவியர் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் விடுதி கட்டிடத்தின் தன்மை மற்றும் குடிநீர், கழிப்பிடம், தங்கும் அறைகள், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், உணவு பொருட்களின் தரம், கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விடுதி மாணவ-மாணவிகளிடம் குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டறியப்பட்டது.
Related Tags :
Next Story