அனைத்து கிராமங்களிலும் பஸ்கள் நின்று செல்லவேண்டும்
அனைத்து கிராமங்களிலும் பஸ்கள் நின்று செல்லவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விருத்தாசலம் வட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் கிளை நிர்வாகி ரவி தலைமையில் நடைபெற்றது. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் அறிவழகி, வட்ட செயலாளர் ராவண ராஜன், நகர செயலாளர் விஜய பாண்டியன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் ஆலடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும், மகளிர் கட்டணமில்லா பஸ்கள் அனைத்து கிராமங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், பச்சமுத்து, குப்புசாமி, ராமச்சந்திரன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story