ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்
கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கி உள்ளது.
கொரடாச்சேரி:-
கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 96 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக மக்களின் பங்களிப்பாக ரூ.2 லட்சம் செலுத்தியுள்ளனர். மீதம் உள்ள ரூ.4 லட்சம் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன், ஒன்றிய பொறியாளர் சசிரேகா, பணி மேற்பார்வையாளர் கண்ணகி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, கண்கொடுத்த வனிதம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, முசிரியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story