வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்
வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மேற்கு ஒன்றிய செயலாளராக கே.சைலேஷ் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பரிந்துரையின் பேரில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இவரை நியமனம் செய்துள்ளனர். வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட சைலேஷ் கிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Related Tags :
Next Story